சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசிதரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆர்டிஐ-யில் மத்திய பாஜகஅரசு மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும்.