சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 17ம் தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாள். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 (தமிழ்நாடு சட்டம். 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025 -ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (1-a) ன் மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி / நகராட்சி / மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு https://chennalcorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் 1/07/2025 முதல் 17/07/2025 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/ மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் 17/07/2025 அன்று மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
The post உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.