அறிமுக இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கும் படம், ‘சிங்கா’. இதில் கயல் சந்திரன், சிஜா ரோஸ், புதுமுகம் மீனாட்சி, ஆதித்யா கதிர், அரிஸ்டோ சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மனோஜ் சின்னசாமி இசையமைக்கிறார். அசோக் குமார் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ருத்ரம் சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் லாப்ரடார் நாய் ஒன்றும் நடிக்கிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், பிணைப்பையும், சொல்லும் குடும்பக் கதையாக இது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.