Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
Dinakaran Tamilnadu

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

EDITOR
Last updated: June 20, 2025 8:33 am
EDITOR
Published June 20, 2025
Share
SHARE

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 20-06-2025 முதல் 26-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
20-06-2025 முதல் 22-06-2025: தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
20-06-2025 முதல் 22-06-2025: தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

20-06-2025 மற்றும் 22-06-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (20-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (21-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்:
20-06-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.
21-06-2025 மற்றும் 22-06-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23-06-2025 மற்றும் 24-06-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

20-06-2025: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21-06-2025: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22-06-2025: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23-06-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு – தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், தெற்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24-06-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
20-06-2025 முதல் 24-06-2025: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன், கோவா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • GDPR
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?