சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அங்கீகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து 22 நாள்கள் ஆகும் நிலையில், அதை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவர் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.