புதுடெல்லி: இந்தியா நீரோட்டத்தை கட்டுப்படுத்தியதன் காரணமாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள அணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. பாகிஸ்தான் விவசாயிகளின் பயிர் விதைப்பு பணிகளில் இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் இரண்டு முக்கிய அணைகளாக ஜீலம் நதியின் குறுக்கே உள்ள மங்களா மற்றும் சிந்து நதியின் குறுக்கே உள்ள தர்பேலா ஆகியவை உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரின் அளவு வேகமாக குறைந்து அணைகள் வறண்டு வருகின்றன. இதற்கு, பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக செனாப் நீர் வரத்தை கட்டுப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கை முக்கிய காரணமானது.