நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் 19 வயதான அமெரிக்காவின் லர்னர் டியனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-5, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த எமிலியோ நவாவையும், 6-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பெருவின் இக்னாசி யோவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.