
புதுடெல்லி: ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளைத் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயற்சி செய்தும் போரை நிறுத்த இயலவில்லை. இந்த நிலையில், அமெரிக்க கருவூல துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (ஓஎப்ஏசி), ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லூகாயில் மீது தடை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நிதி அளித்து வருவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது.

