எளிய மக்களின் கிராமிய மூப்பன், கரிசல் மண்ணின் கதை சொல்லி கி.ராஜநாராயணன் பற்றிய கதைகளை எப்படிச் சொல்வது? அது, சிமிழுக்குள் அடைபட்ட பூதத்தைத் திறப்பதற்கு ஒப்பான செயல் என்றே தோன்றியது.
‘‘மழைக்குக்கூட நான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவனில்லை. அப்படி ஒதுங்கிய சிலபோதும் மழையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’’ என்று வெள்ளந்தியாகச் சொன்னவர் கி.ரா.