தாஜ்மஹாலில் பூட்டப்பட்ட 22 அறைகள்… ரகசியத்தின் பின்னணி இதுதான்

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்திட, அங்கு பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்க உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை, அலகதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி… Read more

வரலாறு பாசிஸ்டுகளை மன்னிக்காது! ஹீரோவாக போற்றப்பட்ட ராஜபக்சேவை.. சிங்களர்கள் தூக்கி எறிந்தது எப்படி?

கொழும்பு: இலங்கையில் சிங்களர்கள் மூலம் ஹீரோவாக கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்சேவின் குடும்பம்.. தற்போது அதே சிங்களர்கள் மூலம் தூக்கி வீசப்பட்டுள்ளது. தூக்கப்பட்ட கைகள்.. கனீர் கோஷம்.. முகத்தில் ஒரு ஆணவ வெறி.. இதுதான் ஹிட்லர் காலத்தில் நாஜிக்களிடம் இருந்த தோற்றம். உங்களை… Read more

கடந்த 90 ஆண்டுகளாக இலங்கை மக்களை வாட்டி வதைக்கும் 9 ராஜபக்சேக்கள்: ரூ.4.57 லட்சம் கோடி கடனுக்காக நாட்டையே அடமானம் வைக்கும் நிலை

இலங்கை என்றாலே ‘3டி’தான். இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளம், தேயிலை தொழிற்சாலை, ஜவுளி. இந்த 3 தொழில்களே இலங்கையின் பிரதான உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தது. குட்டி நாடாக இருந்தாலும், சுற்றுலா தளங்களில் கலைநயங்களால் உலக மக்களை கட்டி… Read more

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியைக் கலைக்க அமெரிக்கா முயன்றதா? சில அடிப்படைக் கேள்விகளும் பதில்களும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைவிதியை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அடுத்த ஒரு நாள் நிகழும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசியலில், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் நேற்று நடந்தது என்ன? பாகிஸ்தான் ஜனாதிபதி… Read more

மரபணு மாற்றப்பட்ட ஆபத்தான உணவுக்கு மறைமுக அனுமதி?

இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI), அதன் அடிப்படைப் பணியான, பாதுகாப்பான – ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்துவது சார்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட உணவு தொடர்பான வரைவு விதிமுறைகள் என்ற பெயரில், மற்ற நாடுகளில்… Read more

கூடுதல் மாணவர்களுக்குத் தயாராக இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்?

அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14-ல் தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்கள் பெருமளவில் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவதைப் பார்க்க முடிகிறது. பெருந்தொற்றால் வேலையிழப்புகள் அதிகரித்து, பெற்றோர்களின் வருமானம் குறைந்ததே இதற்கான காரணம் என்று… Read more

டாஸ்மாக் கதை மாதிரி ஆகாம இருந்தா சரி!

HYDROCARBON NEVER IN TAMILNADU Read more

இஸ்ரேல் -பாலஸ்தீனம் போர் முடிவுக்கு வரட்டும்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தற்போது நடந்துவரும் மோதல்கள் பெரும் கவலையில் தள்ளுகின்றன. சென்ற வாரம் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காஸாவில் இருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து… Read more

எளிமை.. போராட்ட குணம்.. மக்களுக்கான முதல்வர்.. யார் இந்த மம்தா? அரசியலில் உருவெடுத்தது எப்படி?

மேற்கு வங்கத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. அரசியலில் உருவெடுத்தது எப்படி? 213 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்க முதல்வராக… Read more

அதிகரிக்கும் வறுமை நிலை: பெருந்தொற்றின் கொடும் துயரம்

இந்தியாவிலும் சீனாவிலும் 2020-ல் கரோனா பெருந்தொற்றின் விளைவாக வாழ்க்கைத் தரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சொல்லும் ‘ப்யூ’ ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கையானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இந்தியாவில் மட்டும் வறுமை நிலைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் புதிதாக 7.5 கோடிப்… Read more

அதிகரித்து வரும் குழந்தைத் தொழிலாளர்கள்: கல்வித் துறைக்குப் பெரும் சவால்!

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய மும்மடங்கு அதிகரித்துள்ளதாக வெளிவந்திருக்கும் மாதிரிக் கணக்கெடுப்பின் முடிவானது, பள்ளிக் கல்வித் துறை உடனடியாக இவ்விஷயத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான இயக்கம் என்ற அமைப்பு,… Read more

ஜனநாயகம்தான் சூச்சியின் உண்மையான வெற்றி!

மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் ‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி’ (என்.எல்.டி.) பெரு வெற்றி அடைந்திருக்கிறது. மியான்மரில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிரான தடுப்புச் சுவராக மக்கள் ஆங் சான் சூச்சியை இன்னமும்… Read more

அனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன் அவசியமானதாகிறது?

கால் நூற்றாண்டுக் காலத்தில் முதன்முறையாக மத்திய உயர்மட்ட அமைச்சரவையில் ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். லோக் ஜனசக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மரணமும், சில வாரங்களுக்கு முன்பு ஷிரோமணி அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், வேளாண்… Read more

ஜிஎஸ்டி: மாநிலங்கள் துயர நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டும்

மூன்றாண்டுகளுக்கு முன்பு, ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது தற்போது பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. பல்வேறு வரிகள் ஜிஎஸ்டிக்குள் உள்ளடக்கப்பட்டதால் மாநிலங்கள் இழந்த வரிவருவாய்க்கான நிவாரணத்தை ஐந்து ஆண்டுகள் அவற்றுக்குக் கொடுப்பதற்கு ஒன்றிய அரசு… Read more

நீதித் துறைக்குத் தேவை சகிப்புத்தன்மை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனைக் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதும் இந்த வழக்கை அது அணுகிவரும் முறையும் விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளும் தன்மை அதற்கு இல்லை என்பதையே உணர்த்துகின்றன. நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்ட இந்த வழக்கில், மூன்று… Read more

இந்தியப் பொருளாதாரமும் பணவீக்க நெருக்கடியும்

இந்தியப் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாடத்தையும் கரோனா சூறை யாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், பயந்ததுபோலவே பணவீக்க நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது. நாடு தழுவிய பொது முடக்கத்தின் காரணமாகப் பொருட்கள், சேவைகள் கிடைப்பதில் பெரும் இடையூறு ஏற்பட்டிருப்பதால் விலையேற்றம் நிகழ்ந்திருக்கிறது. தேவை குறைந்திருக்கும் நேரத்தில் இப்படி விலையேற்றம் நிகழ்வதுதான் கவலையளிக்கிறது.… Read more