கரோனா சொல்லும் பாடம்: கட்டற்ற நகர்க் குவிமையமாதலைப் பரிசீலனைக்கு ஆட்படுத்துவோம்

இந்தியாவில் நகர்மயமாதல் தொழில் துறை வளர்ச்சியின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படவில்லை; மனித வாழ்க்கை முறையின் மேம்பாடாகவும் கருதப்படுகிறது. ஆனால், நகரங்கள் உற்பத்தியில் காட்டிய வேகத்தைத் தங்களது அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் காட்டுவதற்குத் தவறிவிட்டன. அளவுக்கதிகமான மக்கள் நெரிசல் தொற்றுநோய்களுக்கான களங்களாக எப்படி நகரங்களை மாற்றியிருக்கின்றன… Read more

உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்?

மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க… Read more

தொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை

முன்விரோதம் காரணமாகப் பழிவாங்கும் நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழகத்தையே அதிர்ச்சியில் தள்ளிய தலைகுனிவு. ஆளுங்கட்சி பின்னணியிலிருந்து வந்த அந்தக் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் வேகமான, கடுமையான தண்டனையே இத்தகு குற்றங்களைக் குறைக்கும்.… Read more

மாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை

கரோனா எதிர்கொள்ளல் நடவடிக்கையால் மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிற நிலையில், ‘கரோனா எதிர்கொள்ளல் சிறப்பு நிதி’ என்ற பிரத்யேக நிதி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு என்று இந்திய அரசு அளிக்க வேண்டும். கரோனாவை எதிர்கொள்ளும் செலவுகளும், ஊரடங்கு உண்டாக்கியிருக்கும்… Read more

சென்னையை எப்படிப் பாதுகாக்கப்போகிறோம்?

இந்தியாவிலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கவலைக்குள் தள்ளியிருக்கிறது. நகரமயமாக்கலை வரித்துக்கொண்ட தமிழ்நாடு, அந்த நகரமயமாக்கலை அதிகாரப் பரவலாக்கலின் வழி மேற்கொண்டிருந்தால், அழகிய சென்னை இவ்வளவு ஜனநெரிசலும் சூழல் கேடும் மிக்க நகரமாக… Read more

நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் முக்கியத்துவம் வேண்டும்

கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நோயை எதிர்கொள்வதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவும் முக்கியம். கரோனா பெருவெடிப்புக் கட்டத்தில் சத்தான உணவும் சுகாதாரமான குடிநீரும் மிகவும் அவசியமானவை; அனைத்துச் சத்துக்களும் அடங்கிய சமச்சீரான உணவானது… Read more

அடித்தட்டு மக்கள் மறக்கப்படுவது பெரும் மானுடத் துயரம்

இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதால், உள்நாட்டுக்குள் வேலைக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம் சொந்த ஊர் திரும்ப வழியின்றி நிலைகுலைந்திருக்கின்றனர். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் பல நூறு தொழிலாளர்கள் கொடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு, குழந்தைகளை நடக்க விட்டும் தூக்கிக்கொண்டும் டெல்லியிலிருந்து பல… Read more

மக்கள்தொகைப் பதிவேடு:தமிழக அரசின் சமயோசித நடவடிக்கை!

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரிய நடவடிக்கை. குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்து மக்களிடம் அச்சங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. அதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழக… Read more

யெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது

நாட்டின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டு களாகவே மந்தநிலையில் நீடித்து வருகிறது. வளர்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  நரேந்திர மோடி தலைமையில் முதன்… Read more

தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது

ஜெர்மன் நாட்டின் சைபர் பாதுகாப்பு நிறுவனம், ‘லட்சக்கணக்கான இந்திய நோயாளிகள் பற்றிய தரவுகள் இணையதளத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன’ என்று அளித்திருக்கும் தகவல் மிகவும் கவலைதருகிறது. இந்திய நோயாளிகளின் உடல்நிலை பற்றிய 10 லட்சத்து 20 ஆயிரம் ஆய்வறிக்கைகளும், 12 கோடியே 10… Read more

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

71 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது… Read more

உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடம் பின்தங்கியது ஏன்?

டெல்லி: 2019ம் ஆண்டில் உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கிய நாடுகளுக்கான தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின் தங்கி உள்ளதாக தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் “சிவில் உரிமைகள்” பாதிக்கப்பட்டதே இத்தகைய… Read more

பணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது?

சமச்சீரற்ற பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி இரண்டுமே ஒருசேர இந்தியாவில் இருப்பது பெரிய சங்கடம்தான். ஏனென்றால், எதற்கான நடவடிக்கையை எடுப்பது என்பதில் கொள்கை வகுப்பவர்களுக்குத் தயக்கம் ஏற்படக்கூடும். ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 5%-க்கும் குறைவாக இருக்கும் நிலையிலும், விலைவாசி உயர்வு… Read more

பிரச்சினைகளை முடிப்பதற்கான கருவி பூதாகரப்படுத்திவிடலாகாது!

  வேகவேகமாகக் கொண்டுவரப்பட்டு, அமலாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் கூடவே கடுமையான எதிர்ப்பையும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. உலகில் எந்த ஒரு நாடும் வெளியிலிருந்து தன் நாடு நோக்கி வருபவர்களை வரைமுறைப்படுத்த குடியுரிமையை நிர்ணயிப்பதற்கு என்று ஒரு… Read more

குடியுரிமை திருத்த மசோதா ஒரு தீர்வு அல்ல

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த… Read more

வருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு

வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்படும் பணத்தில், ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. கணக்கில் வராத… Read more