அமராவதி: ஆந்திராவில் ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் புதிய மதுபானக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒரு பெரிய மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் மற்றும் நிதி ஆதாயத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுபான பிராண்டுகளுக்கு சாதகமாக செயல்பட தானியங்கி ஆர்டர் செய்யும் முறையை முடக்கியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.
அதன்பின் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி வந்த பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவானது 3 நாள் நடந்த விசாரணைக்கு பின் 2 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கைது செய்தது. அவர்கள் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர் தனுஞ்செய ரெட்டி, மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ண மோகன் ரெட்டி, சிறப்புப் பணி அதிகாரியாக இருந்தவர். ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனுஞ்சய ரெட்டி, கிருஷ்ண மோகன் ரெட்டி ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post ஆந்திராவில் ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது! appeared first on Dinakaran.