ஹன்சல்பூர்: உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஹன்சல்பூரில் மாருதி நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ளது. இது 640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு இ-விடாரா மின்சார கார் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. ஹன்சல்பூர் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் இ-விடாரா மின்சார காரை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.