புதுடெல்லி: பருத்தி இறக்குமதி மீதான வரிவிலக்கை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு மத்திய அரசு 11 சதவீத இறக்குமதி வரி விதித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிக்கப்படும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிக்கும் நோக்கில் பருத்தி மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் 30 வரை மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இந்நிலையில் இந்த வரிவிலக்கு இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.