Category: தமிழ்நாடு

Tamilnadu latest news from all leading Tamil News Papers

நாட்டையே உலுக்கிய ஐதராபாத் என்கவுண்ட்டர் போலியானது – விசாரணைக்குழு அறிக்கை

புதுடெல்லி ஐதராபாத்தில் பெண் கால்நடை டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் கால்நடை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். முருகன், நளினி,…

பருத்தி நூல் விலை உயர்வு: மத்திய மந்திரிகளுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும், அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதை விரிவாக சுட்டிக்காட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்திடவும், நெசவாளர்களுக்கு…

ப. சிதம்பரம், கார்த்தி வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

இந்­தி­யா­வின் பிர­தான எதிர்க்­கட்சி யான காங்­கி­ர­சின் முக்­கிய தலை­வ­ரும் முன்­னாள் நிதி அமைச்­ச­ரு­மான ப. சிதம்­ப­ரம், அவ­ரது மக­னும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கார்த்தி சிதம்­ப­ரம் ஆகி­யோ­ரது வீடு மற்­றும் அலு­வ­ல­கங்­களை சிபிஐ அதி­கா­ரி­கள் நேற்று காலையி லிருந்து அதி­ர­டி­யாக சோதனை நடத்­தி­னர்.…

மு.க.ஸ்டாலின்: எனக்கு உறுதுணையாக உள்ளார் ஆளுநர்

சென்னை: தமி­ழ­கத்­தில் தமது ஆட்­சிக் காலம் உயர் ­கல்­வி­யின் பொற்­கா­ல­மாக மாற வேண்­டும் என்று விரும்­பு­வ­தா­க­வும் இதற்கு உறு­து­ணை­யாக உள்ள தமி­ழக ஆளு­ந­ருக்கு நன்றி தெரி­விப்­ப­தாகவும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார். நேற்று சென்னை பல்­க­லைக்­கழக பட்­ட­ம­ளிப்பு விழா­வில் கலந்துகொண்டு பேசிய அவர்,…

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 17-ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், 18-ம் தேதி ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை,…

தமிழகத்தின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார்?

தமிழகத்தில் இருந்தும் சிறந்த 10 தொழிலதிபர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் என்னென்ன வணிகம் செய்கின்றனர். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இந்த பட்டியலில் உள்ள சிலர் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஷிவ்…

ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காலியாகின்றன. அதற்கு முன்னதாக, இப்பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க, 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட…

இந்தி திணிப்பு விவகாரம்: கோவை பல்கலைக்கழக விழாவில் கவர்னர்-அமைச்சர் பேச்சால் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடந்தது. பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார். விழாவில்…

சிங்கப்பூர், மலேசியா போல் தமிழக பொருளாதாரத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்துவார் – அமைச்சர் சேகர் பாபு

திமுக சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி 87வது வட்ட கழக திமுக சார்பில் ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்க பொதுகூட்டம் அம்பத்தூர் பாடி யாதவ தெருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல்,…

கரையைக் கடந்தது அசானி புயல்… தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி கரையைக் கடந்தது. எனினும், மீண்டும் காற்றழுத் தாழ்வு நிலையாக வலுவிழந்து…

ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் காலின் கோன்சால்வேஸ் வாதிடும் போது, ‘சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும்…

அசானி புயல் : பலத்த காற்று, கடல் சீற்றம்… தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம்

Cyclone Asani | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெங்களூரை அடுத்து கேரளா.. தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து வரும் நிறுவனங்கள்..!

பல்வேறு காரணங்களுக்காக வெளி மாநிலங்களில் இயங்கி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டு இருக்கும் நிலையில், பெங்களூர் நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது கேரள நிறுவனம் ஒன்று தனது கேரள வர்த்தகத்தை மொத்தமாக மூடிவிட்டு தமிழ்நாட்டில் வர்த்தகத் தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இது…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக்கத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்…

தஞ்சையில் நடந்த தேர் விபத்து; இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சியினர்: பேரவையில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு

சென்னை: தஞ்சையில் நடந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினார். இதுகுறித்து சட்டப்பேரவையில், முதல்வருக்கு நன்றி தெரிவித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பேசியதாவது: தஞ்சை தேர்…