திருத்தணி: தமிழ்நாடு காவல் துறை சார்பில், அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி வரும் 17ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை மைதானத்தில் தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து போலீசார் மற்றும் துறை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் போலீசார் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் டூடன் தலைமையிலான ரைபிள் சுடும் துணை பாதுகாப்பு படையினர் 29 பேர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சவுஹான் தலைமையிலான 21 போலீசார் உள்பட 50 பேர் 2 குழுக்களாக ரயில் மூலம் நேற்று திருத்தணி ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை ரயில்வே போலீசார் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் திருத்தணியிலிருந்து போலீசார் வாகனங்கள் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் சென்றனர். அவர்கள் அனைவரும் நாளை தொடங்கவுள்ள அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் ரைபில் சுடும் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி: அசாம், பீகார் போலீசார் திருத்தணி வருகை appeared first on Dinakaran.