ஆடு, கோழி பலியிடத் தடை, கார்த்திகை தீப விவகாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழாவை நடத்துவதற்கு தடைகோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில், பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு தர்கா நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

