அஜித்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். ‘நேசிப்பாயா’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், “பில்லா 3 படம் கண்டிப்பாக நடைபெறாது. ஆனால், மீண்டும் நான், அஜித், யுவன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். இந்தப் பதில் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இவருடைய இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தினை ராகுல் வெளியிடுகிறார். இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.