‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்தார் என்று ஆரவ் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘விடாமுயற்சி’. இதில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். அஜித்துடன் நடித்தது குறித்து ஆரவ் “கார் விபத்துக்குள்ளான காட்சி நன்கு திட்டமிடப்பட்ட காட்சி தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கி முடித்தோம்.