
சென்னை: "நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. வருகின்ற 2026-ல் அதிமுக ஆட்சி அமைவதை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது" என்று அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஆலமரம் போல தழைத்து, தரணியெங்கும் கிளைகள் பரப்பி நிற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54-ஆவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, உங்கள் அனைவரையும் இந்த மடல் வழியாகச் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

