சக நடிகை ஒருவர் பொறுப்பற்ற முறையில் தன்னிடம் பேசியதாக நடிகை சிம்ரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சிம்ரன் பேசியது: “என்னுடைய சக நடிகை ஒருவருக்கு சமீபத்தில் மெசேஜ் செய்திருந்தேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் உங்களை பார்ப்பதில் ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறியிருந்தேன். உடனடியாக அவரிடம் இருந்து எனக்கு ரிப்ளை வந்தது. ‘ஆன்ட்டி’ கதாபாத்திரங்களில் நடிப்பதை விட இது பரவாயில்லை என்று கூறியிருந்தார். அப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை நான் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.