“அனைவருடைய அன்புக்கு நன்றி, எந்தவொரு தடை வந்தாலும் அதை தாண்டி வருவேன்” என்று விஷால் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பிரச்சினைகளையும் கடந்து வெளியாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் விஷால் பேசியபோது, “எத்தனை பேர் நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன். இன்னும் பல மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் உள்ளது. சீக்கிரம் குணமாகி வாருங்கள் என்று சொன்னார்கள்.