பெலிஸ்: அமெரிக்காவில் நடுவானில் கத்திமுனையில் விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் நகரில் இருந்து சுற்றுலாத்தலமான சான் பெட்ரோவுக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அதில், 14 பயணிகள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது, திடீரென கத்திமுனையில் ஒருவர், விமானத்தை கடத்தினார். திடீரென அந்த நபர், விமானி உள்பட 3 பேரை கத்தியால் குத்தினார். அதனால் பயணிகளில் ஒருவர், தன்னிடம் இருந்து லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால், அந்த நபரை சுட்டு கொன்றார். போலீசார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்த முயன்றது அமெரிக்காவை சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர்(49) என தெரியவந்தது. டெய்லர் எப்படி கத்தியை விமானத்திற்குள் கொண்டு வந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக பெலிசியன் அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.
The post அமெரிக்காவில் பரபரப்பு விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.