பீஜிங்: அமெரிக்க கச்சா எண்ணெய்க்கு 10% வரியும் நிலக்கரிக்கு 15 சதவீதம் வரி விதித்தது சீனா அரசு அறிவித்துள்ளது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரிவிதித்ததற்கு பதிலடியாக அமெரிக்க கச்சா எண்ணெய், நிலக்கரிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்ந்து பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது மற்றும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு, சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி என பல உத்தரவுகளை பிறபித்தார். அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக டிரம்ப் கூறினார்.
இதனை அடுத்து சீனா மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக சீன அரசும் வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இன்று(பிப். 4) எடுத்துள்ளது. அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு பொருள்கள் மீது 15 சதவிகதம் வரியும், கச்சா எண்ணெய், வேளாண் உபகரணங்கள், குறிபிட்ட ரக கார்கள் உள்பட இன்னும் சில பொருள்கள் மீது 10 சதவிகிதமும் கூடுதல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளை பிப். 10-ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அமெரிக்க கச்சா எண்ணெய்க்கு 10% வரியும் நிலக்கரிக்கு 15 சதவீதம் வரி விதித்தது சீனா அரசு appeared first on Dinakaran.