நியூயார்க்: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனைடட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ப்ரையன் தாம்ப்ஸன் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 50. இந்நிலையில் சந்தேக நபரின் சிசிடிவு புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ப்ரையன் தாம்ப்ஸன் அங்கிருந்து யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் ப்ரையன் தாம்ப்ஸனின் கழுத்து மற்றும் கால் பகுதியில் துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.