சென்னை: ‘அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பாக இன்று மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, பெண்கள் குறித்தும், சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஏப்.17) விசாரணைக்கு வந்தது.