புதுடெல்லி: அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு சட்ட ரீதியாக முழு அதிகாரம் உள்ளது என தமிழக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட தமிழக அரசின் 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எதிர்த்து தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.