புதுடெல்லி: குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக ஆஜராவதற்கு டெல்லியுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு இன்று (ஏப்.15) சென்றார். வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “நான் மக்களுக்காக பேசும் போது எல்லாம் அவர்கள் என்னை ஒடுக்கப்பார்க்கிறார்கள். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர்கள் விசாரணை அமைப்புகளின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். என்னிடம் மறைப்பற்கு எதுவும் இல்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை. விசாரணைக்கு எப்போது தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளோம். இன்று இந்த வழக்குக்கு ஒரு முடிவு வரும் என்று நான் நம்புகிறேன்.