டாக்கா: வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார்கள். வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கவிழ்க்கப்பட்டது. இதனையடுத்து இங்கு இஸ்லாமிய குழுக்கள் பலம் பெற்றுள்ளன. அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த முயற்சிகளை அவர்கள் இஸ்லாமியர்களுக்கு விரோதமானவை என்று கூறுகின்றனர். அரசினால் நியமிக்கப்பட்ட மகளிர் விவகார சீர்திருத்த ஆணையத்தின் வரைவு பரிந்துரைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டாக்காவில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் அரசு சாரா அல்லது காவ்மி மதராசா அல்லது இஸ்லாமிய அமைப்புகள் கவ்மி மதரஸா, மதக்கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவவிகள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர். சொத்துரிமை தொடர்பான உரிமைகள் உட்பட இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்வதற்கான முன்மொழியப்பட்ட பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசுக்கு எதிராக போராட்டம் வங்கதேசத்தில் பெண்கள் பேரணி appeared first on Dinakaran.