அருண் விஜய் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
பிடிஜி நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய் நடித்து வரும் படம் ‘ரெட்ட தல’. இப்படத்துக்காக தனுஷ் பாடலொன்றை பாடியிருக்கிறார். இப்பாடலை வெளிநாட்டில் காட்சிப்படுத்த படக்குழு தயாராகி வருகிறது. விரைவில் தனுஷ் பாடியிருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.