லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 95 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் அஸ்மதுல்லா ஓமர் ஸாய் 63 பந்துகளில், 5 சிக் ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 67 ரன்களும் விளாசினர்.
ஆஸ்திரேலிய அணி சார் பில் பென்டுவார்ஷுய்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 274 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேத்யூ ஷார்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்து இருந்தார்.