சென்னை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி வள்ளிநாயகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் அ.வள்ளிநாயகம் (78) நேற்று சென்னையில் காலமானார்.
அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வள்ளிநாயகத்தின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், அறிவியல் இயக்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று (நவ.30) காலை அஸ்தினாபுரத்தில் தகனம் செய்யப்படுகிறது.