நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா தீவில் 1963ம் ஆண்டு மூடப்பட்ட பிரபலமான அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் அறிவிப்பில்,’ நீண்ட காலமாக அமெரிக்கா கொடூரமான வன்முறை, மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், நாம் மிகவும் தீவிரமான தேசமாக இருந்தபோது, மிகவும் ஆபத்தான குற்றவாளிகளைப் பூட்டி வைக்கவும், அவர்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய எவரிடமிருந்தும் அவர்களை வெகு தொலைவில் வைத்திருக்கவும் அல்காட்ராஸ் சிறையை பயன்படுத்தினோம்.
இனியும் அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். அதனால்தான், அமெரிக்காவின் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை தங்க வைப்பதற்காக, அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க உத்தரவிடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
The post அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு appeared first on Dinakaran.