அல்லு அர்ஜுன் படம் தாமதமாவதால், வெங்கடேஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் த்ரிவிக்ரம்.
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆனால், இப்படம் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருந்தது. இப்படம் வரலாற்று கதையொன்றை பின்னணியாக கொண்டது எனவும், பெரும் பொருட்செலவில் இது உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.