சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது கிராமத்தில் பழமையான வெங்கடேசப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடல், பாடல் நிகழ்ச்சி எவ்வித சட்டம் – ஒழுங்கு பிரச்னையுமின்றி அமைதியாக நடத்தப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 11ம் தேதி அன்று கோயில் திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த கடலூர் துறைமுகம் போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். எனவே ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.