நாகர்கோவில் : ஆண்டுதோறும் கடலரிப்பால் அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்ற அழிக்கால் கிராமத்தில் ரூ.4.28 ேகாடியில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்ட கடலோர பகுதிகள் ஆண்டுதோறும், ஏப்ரல், மே மாதங்களில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடல் சீற்றத்தின்போது கடல் அலைகள் ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க பல கடற்கரை கிராமங்களிலும் கடலரிப்பு தடுப்புசுவர்கள் போடப்பட்டுள்ளன.
இதில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அழிக்கால் கிராமம் பெரும்பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. அழிக்கால் மற்றும் பிள்ளை தோப்பு பகுதிகளில் கடல்சீற்றம், கள்ளக்கடல் போன்றவற்றால் அடிக்கடி கடல்நீரும், மணலும் இழுத்துவந்து வீடுகளை சூழ்ந்து விடுகிறது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில் மணல் நிரம்பியதால் பல வீடுகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. இந்த பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த பகுதியில் கடல் சீற்றம், கள்ளக்கடல் நிகழ்வுகள் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அழிக்கால் கடற்கரை கிராமத்தில் தூண்டில் வளைவு பணிக்கான அரசாணை பெறப்பட்டு 4 தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் கூறுகையில், ‘அழிக்கால் கிராமத்தை பாதுகாக்கும் வகையில் சேதமடைந்த கடலரிப்பு தடுப்பு சுவரை 560 மீட்டர் நீளத்திற்கு மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.4.28 கோடியில் 2024-25க்கு தரப்படுத்தப்பட்ட விலைப்பட்டியலின்படி மதிப்பீடு தயாரித்து நிர்வாக ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தற்போது அந்த மதிப்பீடானது தலைமை பொறியாளர், வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம் அலுவலகத்தில் பரிசீலனையில் உள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆண்டுதோறும் கடலரிப்பால் பாதிப்பு அழிக்காலில் ₹4.28 கோடியில் கடலரிப்பு தடுப்புசுவர் திட்டம் appeared first on Dinakaran.