உடுமலை: கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளத்தில் அவர் பேசியதாவது: ஆனைமலை ஆறு – நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை. தமிழகத்தை ஆளும் திமுகவும், கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. எனவே, கேரள அரசிடம் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வேண்டும்.