நியூயார்க்: அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பதவியேற்புக்கு முன்பாக அவர் ஒரு மிகப்பெரிய சட்டசிக்கலை எதிர்கொண்டிருந்தார். 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பாக, ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்சுடனான தன் பாலியல் உறவை மறைக்க, அந்த நடிகைக்கு சுமார் 13 லட்சம் அமெரிக்க டாலர்களை அமெரிக்க தேர்தல் பிரசார நிதியில் இருந்து டிரம்ப் கொடுத்தார் என புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் டிரம்ப் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் டிரம்ப் மீதான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட இருந்தது. டிரம்ப் சிறை சென்றால் அமெரிக்க அதிபர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் எந்தவித நிபந்தனையுமின்றி டிரம்ப் விடுவிக்கப்படுவதாக மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
The post ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு டிரம்ப் திடீர் விடுதலை: நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.