புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் “மிகப்பெரிய ஊழல்” திட்டம் என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு போலியான திட்டம் என்று உச்ச நீதிமன்றமும் கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய மோசடி என்பது நாடு முழுவதில் இருந்தும் வெளிவந்துள்ளது. தற்போது இருக்கக்கூடிய மத்திய அரசு மாறிய பிறகு நடத்தப்படும் விசாரணை மூலம்தான் இந்த திட்டம் எவ்வளவு பெரிய மோசடி என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.