சென்னை: அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை 25-09, 25-17, 25-15 என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி பெங்களூரு அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
ஆர்எஸ்பி கொல்கத்தா 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. 2-வது இடம் பிடித்த பெங்களூரு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவர் பிரிவில் ஆர்எஸ்பி சென்னை தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் அந்த அணி 25-21, 25-22, 25-15 என்ற செட் கணக்கில் டெல்லி மத்திய தலைமைச் செயலகம் அணியை தோற்கடித்தது. 3-வது இடத்தை ஆர்எஸ்பி கொச்சின் பிடித்தது.