விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், ஆற்றின் அருகே வசித்து வந்த புகழேந்தி, அவரது தந்தை கலையரசன், தாய் சுந்தரி ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இதில் புகழேந்தி மற்றும் சுந்தரி ஆகிய இருவரும் 17 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர்.