சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒன்றிய அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை காங்கிரஸ், மதிமுக., வி.சி.க.வைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் அனுப்பி வைத்தனர். சென்னை வியாசர்பாடி அஞ்சல் நிலையத்தில் இருந்து திருவள்ளுவர் படத்தை ஆளுநருக்கு அனுப்பினர். இந்திய அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தாவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என தெரிவித்ததுடன். திருவள்ளுவர் தினத்தன்று காவிமயமாக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை ஆளுநர் பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
The post ஆளுநருக்கு திருவள்ளுவர் படம் அனுப்பிவைப்பு..!! appeared first on Dinakaran.