ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது சொந்த பணியாக டெல்லி செல்வதும், அதன்பின், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், நேற்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன், ஆளுநரின் செயலர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர்.