ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதுவரை 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் 97-வது ஆஸ்கர் விருது, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில், இந்திய நேரப்படி நாளை காலை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தைக் கவுரவப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.