கொல்கத்தா: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கும், சரியான அணி சேர்க்கையை கண்டறிவதற்கும் இந்திய அணிக்கு, இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு தொடர் உதவக்கூடும்.