கார்டிஃப்: மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கார்டிஃப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர்களை கொண்டதாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் எய்டன் மார்க் ரம் 28, டெவால்ட் பிரேவிஸ் 23, டோனோவன் பெரைரா 25 ரன்கள் சேர்த்தனர்.