புதுடெல்லி: “மிகப் பெரிய மாற்றத்துக்கான தேவை உள்ள நிலையில், இந்த அரசு யோசனைகள் இன்றி திவாலாகிவிட்டதையே மத்திய பட்ஜெட் உணர்த்துகிறது” என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குறிப்பாக, பிஹாரை முன்வைத்து காட்டமாக கேள்விகளை அக்கட்சி எழுப்பியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மத்திய பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "குண்டு காயங்களுக்கு பேண்ட்எய்டு போடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், நமது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால், இந்த அரசு யோசனைகள் விஷயத்தில் திவாலாகி விட்டது" என தெரிவித்துள்ளார்.