மாஸ்கோ: 15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியா முதலில்" கொள்கை மற்றும் "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சி ஆகியவற்றை பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறிப்பிட்டுப் பேசிய புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சி, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.