வாஷிங்டன்: 2025ம் ஆண்டுக்கான உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புக்களை ஐக்கிய நாடுகள் சபை கடந்த புதனன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2025ம் ஆண்டில் 5.5 சதவீதமாகவும், 2026ம் ஆண்டில் 6.0 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வலுவான செயல்திறன், பூடான், நேபாளம் மற்றும் இலங்கை உட்பட வேறு சில பொருளாதாரங்களில் பொருளாதார மீட்சியால் உந்தப்படுகின்றது. குறிப்பாக மருந்துகள், மின்னணுவியல் ஆகியவற்றில் வலுவான ஏற்றுமதி வளர்ச்சியானது இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தியாவின் பொருளாதாரம் 2025ம் ஆண்டில் 6.6 சதவீதமாக வளரும்: ஐநா அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.