
புதுடெல்லி: இந்திய தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு தென்னாப்பிரிக்க தேர்தல் ஆணையத்தின் தலைவர் மொசோதோ மோப்யாவிடம் இருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்தது. சுமார் 7.5 கோடி வாக்காளர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்துமுடிய அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

